பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்


பாவேந்தரின் புகழ்மொழி:
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்

எனப் பாவேந்தர் பெரியாரை புகழ்கிறார்.

பெரியாரின் பெண்விடுதலை சிந்தனைகள்:
  • பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் இரண்டு வகை.
  • ஒன்று, அடிப்படைத் தேவைகள் - பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, அரசுப்பணி
  • மற்றொன்று, அகற்றப்படவேண்டியவை - குழந்தைத் திருமணம், மணக்கொடை, கைம்மை வாழ்வு
பெண்கல்வி:
  • பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது என்றார்.
  • “ஆண்கள் பெண்களைப்  படிக்கச் வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்க வேண்டும். நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு பெண்களைப் பகுத்தறிவற்ற  சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை; இவ்விழிநிலை ஒழிக்கப்பட வேண்டும்” என்றார்.
பெண்ணுரிமை:
  • “ஆணுக்குப் பெண் இளைப்பில்லை” என்று சிந்தித்தவர் பெரியார்.
  • பெண்கள் தத்தம் கணவனுக்கு மட்டுமே உழைக்கும் அடிமையாக இராமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் புகழ் பெற்ற பெண்மணிகளாக விளங்க வேண்டும்” என்று வலியுறித்தினார்.
சொத்துரிமை:
  • பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டமையே அவர்களின் அடிமை வாழ்வுக்கு காரணம் என்று உணர்ந்தார்.
  • அதற்காகக் அவர்கள் போராடவும் கிளர்ச்சி செய்யவும் வேண்டுமெனக் கூறினார்.
அரசுப்பணி:
  • அரசாங்கத்தின் அனைத்துத்துறைகளிலும் பெண்கள் பணியாற்றும் பொது நம் சமுதாயத்தில் புரட்ச்சி ஏற்படும் என்றார்.
குழந்தைதிருமணம்:
  • குழந்தை திருமணம் பற்றி “சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” எனக்கூறி அதனை நீக்கப் பாடுபட்டார்.
மணக்கொடை மறுப்பும் கைம்மை ஒழிப்பும்:
  • சமுதாயத்தில் முறையான அன்பும் தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால் தான், இம்மாதிரியான தீமைகள் ஒழிக்க இயலும். தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்குமாடுகளாக இல்லாமல், பந்தயக்குதிரைகளாக மாற வேண்டும்.
  • தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளரவேண்டும் என்றார்.
  • கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தீங்கில்லை என்றார்.
ஒழுக்கம்:
ஒழுக்கமென்பதும் கற்பென்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாகும் என்றார்.
பெரியார், பெண்களே சமூகத்தின் கண்கள் என்று கருதியவர்.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...