திராவிட மொழிகள் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


மொழிகள்:
  •  தனக்கென தனிச்சிறப்பும், பல மொழிகள் தோன்றிவளர அடிப்படையாகவும் உள்ள மொழி  மூலமொழி
  •  மூலமொழியில் இருந்து தோன்றி வளர்ந்த மொழிகள் - கிளைமொழிகள்.
 இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு:
  •  இந்தியாவில் மொத்தம் பனிரெண்டு மொழிக்குடும்பங்கள் உள்ளன.
  • அவற்றுள், 324 மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிவியல் கணக்கொடுப்பு தெரிவிக்கின்றது.
இந்தியமொழிக் குடும்பங்கள்:
  •  இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையும் "இந்தோ-ஆசிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்திரோ-ஆசிய மொழிகள், சீன-திபெத்திய மொழிகள்" என அடங்குவர்.
  •  நம்நாட்டில் 1300க்கும் மேற்பட்ட மொழிகளும், அதன் கிளைமொழிகளும் பேசப்பட்டு வருகின்றன.
 மொழிகளின் காட்சிசாலை:
  • மொழியியல் அறிஞர் ச. அகத்தியலிங்கம் இந்திய நாட்டை "மொழிகளின் காட்சிசாலை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
திராவிட மொழிக் குடும்பங்கள்:
தென்திராவிட மொழிகள்:
  •  தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா
நடுத்திராவிட மொழிகள்:
  • தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பொங்கோ, ஜதபு
வடதிராவிட மொழிகள்:
  • கரூக், மால்தோ, பிராகுய்
  • திராவிட பெரு மொழிகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்
  • திராவிடம்: திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழியாகும்.
  • திராவிடம் என்னும் சொல் திராவிடநாடு எனும் பொருளைத் தரும்.
  • திராவிடம் என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் - குமாரிலபட்டர்.
  • திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரிகம் முதலிய சொற்றொடர்களில் திராவிடம் என்னும் சொல் பெயரடையாக வந்துள்ளது எனக் கால்டுவெல் கூறியுள்ளார்.
  • கால்டுவெல் திராவிடம் என்னும் சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
 கால்டுவெல் கூற்று:
  • தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளை ஒரு காலத்தில் தமிளியன் (tamilian) அல்லது தமுலிக் (tamulic) என்று அழைத்தனர்.
  •  அவற்றுள் தமிழ், மிகுந்த சிறப்பும் பழமையும் பெற்ற மொழியே எனினும், பல திராவிட மொழிகளில் அதுவும் ஒன்று.
  • எனவே, இவ்வினமொழிகள் அனைத்தையும் "திராவிட" எனும் சொல்லைத் தாம் கையாண்டதாகத் கால்டுவெல் கூறியுள்ளார்.
 ஈராஸ் பாதிரியார் கூற்று:
  • திராவிட என்னும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானது.
  • தமிழ் - திரமிள - திரவிட - திராவிட என உருவாயிற்று எனக் கூறுகிறார் மொழியியல் அறிஞர் ஈராஸ் பாரதிரியார்.
  •  திராவிட மொழிகள் என்றாலே தமிழ் மொழியைதான் குறிக்கும் என்கிறார்.
 தலைமைச் சிறப்பு:
  •  திராவிட மொழிகள் அனைத்திற்கும் மூலமான மொழியை "முன்னைத் திராவிட மொழி, மூலத் திராவிட மொழி, தொன்மை திராவிட மொழி" எனப் பல்வேறு சொற்களால் குறிப்பர்.
  • இம்மூலமொழியாக முதன்முதலில் தனித்து வளர்ந்த மொழி தமிழ்.
  •  மற்ற திராவிட மொழிகள் தமிழில் இருந்து பிறந்தவை.
  • எண்பது விழுக்காடு அளவிற்குத் திராவிட மொளிக்கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிட மொழி தமிழ்.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...